Here are some challenging Indian situations of ordinary people who willingly chose to be considered fools. Very often they end up being losers. They were inspired by the foolishness of the cross as found in I Corinthians 1:18-31. No wonder smart people think these Christians are idiots. But then, they are "Christian Idiots". If you are one of them, don’t lose heart... There has always been Christian Idiots and one of them died on the cross.
Sunday, November 27, 2011
நான் ஒரு முட்டாளுங்க!- 6
“ஆவிக்குரிய” கூட்டங்களுக்குப் போகும் எனது நல்ல கிறிஸ்தவ நண்பர்கள் என்னையும் அந்தக் கூட்டங்களுக்கு கூப்பிடுவாங்க. நானும் ஒன்னுரெண்டு கூட்டங்களுக்கு போயிருக்கேன். பாட்டும் மியூசிக்கும் நம்ம ஞானப்பாட்டைவிட ரொம்ப நல்லாவே இருக்கும். ஆனா போதனையோ அப்படி இப்படி சுத்தி “முழுகு ஞானஸ்நானம் எடுத்தால் தான் மோட்சம் கிடைக்கும்” னு வந்து முடிப்பாங்க. அது மட்டுமில்லை, “யோர்தானிலே யோவான் ஸ்நானகன் முழுக்கு ஞானஸ்நானம் குடுத்ததார்”னு தானே வேதம் சொல்லுது" னு திருமறை ஆதாரம் வேரே காட்டுவாங்க.
எனக்கு சில கேள்விகளுக்கு விடை தெரியனுங்க: யாருங்க இந்த யோவான் ஸ்நானகன்? அவரு ஒரு யூதருங்க! ஞானஸ்நானம் வாங்க அவரு கிட்ட திரண்டு வந்த மக்கள் கூட்டம் யாருங்க? அவுங்க எல்லாருமே யூதர்கள்தாங்க. ஞானஸ்நானம் வாங்கின பிறகும் அவுங்க யூதர்களாகவே தான் இருந்தாங்க. யோவான் ஸ்நானகன் குடுத்த முழுகு ஞானஸ்நானம் அவர்களை ரட்சிக்கவுமில்லை; கிறிஸ்தவுங்களாக்கவுமில்லை.
“இயேசுவானவரும் அவரிடத்திலே முழுக்கு ஞானஸ்நானம் வாங்கினாரே”னு சொல்லுவாங்க. இயேசு யாருங்க? எட்டாம் நாளிலெ விருத்தசேதனம் பெற்று, ஒவ்வொரு சனிக்கிழமையும் (ஏழாம் நாளும்) ஒழுங்கா ஜெபாலயம் போன பாரம்பரிய யூதர் தானே! அவர் கைக்கொண்ட யூதப் பாரம்பரியத்தைப்பற்றி கிறிஸ்தவர்களான நமக்கென்னாங்க?
கிறிஸ்தவ ஞானஸ்நானம் பற்றி என்னைக் கேட்டிங்கனா, “வேதம் சொல்லுவது தாங்க சரி” ன்னு சொல்லுவேன். “ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்....உண்டு.” (எபேசியர் 4:5) எனக்கு இரண்டாவது ஞானஸ்நானம் வேண்டவே வேண்டாங்க. ஏன்னா அது முதல் ஞானஸ்நானத்திலே எனக்கு கிடைச்ச கடவுளுடைய கிருபையை குப்பையிலே போடுரா மாதிரி இருக்குமுங்க.
“முழுக்கு ஞான்ஸ்நானம் வாங்காதவுங்களுக்கு பரலோகத்திலே இடமில்லை!”ன்னு அதே நல்ல கிறிஸ்தவ நண்பர்கள் சொன்னாங்க. அப்படி ஒரு பரலோக இராஜ்யத்துக்கு போக நான் ஆசைப்படலேங்க. அதைவிட “உம்முடைய இராஜ்யம் வருவதாக உம்முடைய சித்தம்...... பூமியிலும் செய்யப்படுவதாக.....” என்ற ஜெபத்தை நிஜப்படுத்த உழைப்பதே எனக்கு போதுமுங்க. ஏங்க, நான் சொல்ரது கொஞ்சம் முட்டள்த் தனமாக தெரியுதா? கவலையில்லைங்க.. மத்தேயு 28:20 லெ “உங்களொடிருக்கிறேன்”னு வாக்களித்தவுரும் அதை நம்பி பரலோகம் போகனும்னு ஆசைப் படாம, கடவுளுடைய இராஜ்ய வருகைக்காக உழைக்கிற எல்லருமே என்னோட சேர்ந்த (முட்ட்டாள்) கூட்டந்தாங்க.
Subscribe to:
Post Comments (Atom)
மிக சரியான கட்டுரை.இதை அனைத்து கிறிஸ்தவ மக்களும் படித்து உண்மையை புரிந்து கொண்டால் சரி.
ReplyDelete