Sunday, November 27, 2011

நான் ஒரு முட்டாளுங்க!-4

நான் ஒரு டீச்சருங்க. என் மகனுக்குக் கலியாணம். செலவுக்கு உதவியாயிருக்குமேன்னு PF லே part final விண்ணப்பம் கொடுத்திருந்தேன். இரண்டு ஓலை கூறியாச்சே இன்னமும் பணம் வந்தபாடில்லையேன்னு கவலையா இருந்தேன். “பணமெல்லாம் sanction ஆயி வந்திருச்சும்மா, ஆபீஸ்லே “கொஞ்சம்” எதிர் பார்க்கிராங்க; முட்டாளா இல்லாமே கொடுக்கிறதை கொடுத்திட்டு உங்க பணத்தை உடனடியா வாங்கிக்கிங்கோ” ன்னு எங்க HM சொன்னாரு. அவரும் கிறிஸ்தவர் தான். ந்ல்ல மனுஷர், பாவம்; ஆனா உலகம் தெரிந்தவர். “பணம் வர்ரப்ப வரட்டும், சார், எல்லாம் கடவுளுக்குத் தெரியும்” ன்னு அவருகிட்டே சவடாலா சொல்லிட்டு வந்துட்டேன். லஞ்சம் கொடுக்க எனக்கு மனசு வரலேங்க. HM சார் சொன்னா மாதிரி, நான் ஒரு முட்டாள்தாங்க! மூணாவது ஓலையும் கூறியாச்சு; பணம் இன்னும் வரலீங்க. **** **** **** **** **** சொன்னா நம்ப மாட்டீங்க மகன் கலியாணத்திற்கு நாலு நாளைக்கு முன்னாலே பணம் வீடு தேடி வந்திடுச்சு! ஆபீசுலே தணிக்கைக் கெடுபிடியாம். சும்மா சொல்லக்கூடாதுங்க, முட்டாளுங்க மேலேயும் சாமி கருணை வேச்சிகிட்டுத்தாங்க இருக்காரு!!

No comments:

Post a Comment