Sunday, November 27, 2011

நான் ஒரு முட்டாளுங்க!-5

குடும்பமா நாங்க வெளியே போரதுன்னா ஒரே அவசரடிதான், போங்க. காலைவேளையிலே கேக்கவே வேண்டாம். பையனுங்க பள்ளிக்கூடத்திற்கு பிந்திடக்கூடாதுன்னு என்னை ஒரு வழி பண்ணிடுவானுங்க. இவரு மட்டும் என்ன! மதிய டிபன் நேரத்திலேயே ரெடியா இல்லேன்னா காது கிழியர மாதிரி கத்துவாரு. ஆனா பாருங்க ஞாயிற்றுக் கிழமை அன்னைக்கு இந்த அவசரம் எல்லாம் போன இடம் தெரியாது. ரொம்ப சவகாசமாத் தான் காரியம் நடக்கும். பசங்க பள்ளிக்கூடம் மாதிரி ரெண்டாவது மணியடிச்சா கோயில் கதவ மூடுரதுக்கு வாச்மேனுமில்லை. அவரு ஒர்க் ஷாப் மாதிரி வந்த நேரத்தை பன்ச் அடிக்கிற கடிகாரமுமில்லே. “கோயிலுக்குதானே, மெதுவா போனா போதும்” னு ஒரு மெத்தனம்! வாரா வாரம் கோயிலுக்கு பிந்தி போரது எனக்கு ரொம்ப சங்கடமா இருக்குதுங்க. ஆராதனைஆரம்பிக்கிறதுக்கு முன்னாலேயே போய் அமைதியா ஜெபம் பண்ணுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆரம்ப துதி பாடலையும், பாவ அறிக்கையையும், ஐயர் அறிவிக்கும் பாவ மன்னிப்பையும் தவர விட்டுட்டா குளிக்காம கோயிலுக்கு போனாமாதிரி இருக்குதுங்க. ஆண்டவர் நம்ம பாவத்தை மன்னிச்சாதானே நாம் அவரை ஆராதிக்க முடியும்! இதெல்லாம் என் குடும்பத்துக்கு எங்கே விளங்குது! எனக்குத்தான் முட்டாள் பட்டம்.

No comments:

Post a Comment