Saturday, December 17, 2011

CHRISTIAN IDIOT - VIII

I am a teacher in a mission school, a place where practical Christianity finds expression! Some of my colleagues at school have already bought silk saris for Christmas. These days, lunch time conversations in the staff room center around clothing for Christmas. I am scared to join in. They might raise their eye-brows if I tell them that I was not going to buy expensive new clothes for my family. We as a family have decided to include two less fortunate families in our Christmas budget. We do not have much to spare; but still we want to share what ever we have with others during this Christmas season. This may not be possible unless we curtail expenses on ourselves. I do not dare to tell my colleagues about our family decision. They sure would have solid arguments to justify a gala Christmas with glittering dresses and all. I would rather listen to the silent message of God’s gift of His son which involves self-giving. I suppose you don't understand our Christmas budget. We as a family do not fully understand God’s self-giving love either! But Christmas has taught us to give until it hurts; and there is joy in getting hurt like that! Does that sound a little bit idiotic? Perhaps it does. But my husband and I agree that the joy of giving comes from the sacrifices it involves. Merry Christmas!

நான் ஒரு முட்டாளுங்க - 8

நான் ஒரு மிஷன் ஸ்கூல் டீச்சர். எங்க பள்ளியிலே நடைமுறை கிறிஸ்தவம் அரங்க்கேறுவதை நல்லாவே பார்க்கலாம். எங்கூட வேலை செய்கிற பல பெண்கள் இப்பவே பண்டிகைக்கு பட்டுப் புடைவை வாங்கிட்டாங்க. இப்பவெல்லாம் எங்க ஸ்டாப்ஃ ரூம்லே பண்டிகைகு துணிவாங்குவது பற்றிதான் பேச்சு. நான் வாயை திறக்க பயந்துகிட்டு பேசுவதே இல்லை. எங்க குடும்பத்தினக்கு இந்த வருஷம் விலையுயர்ந்த துணிமணி வாங்க போகிறதிலேனு சொன்னா என்னை ஒரு மாதிரியா பாப்பாங்க. வசதி குறைந்த இரண்டு குடும்பத்துக்கு இந்த கிறிஸ்மஸில் உதவி செய்யனும்னு நாங்க குடும்பமா தீர்மானம் பண்ணியிருக்கோம். அந்த அளவுக்கு செலவு செய்ய எங்ககிட்டே தாராளமா பணமில்லை. ஆனா கிறிஸ்மஸ் காலதிதிலே எங்ககிட்டே இருக்கிறதை பகிர்ந்து கொடுக்கனும்னு ஆசை மட்டும் நிறையாவே இருக்கு. எங்க செலவை குறைச்சுக்கிட்டாதான் இதை நாங்க செய்யமுடியும். இந்த குடும்ப தீர்மானத்தை நான் எங்க டீச்சர்ஸ் கிட்டே சொல்ல முடியுமா, சொல்லுங்க! நல்லா ட்ரெஸ் பண்ணி, சந்தோஷமா கிறிஸ்மஸ் கொண்டாடுவதிலே தப்பே இல்லைங்கிரா மாதிரி ஏதாவது சொல்லி என் மனசை குழப்பிருவாங்க. நான் கேட்க விரும்புவது அது இல்லை. தன்னையே ஒறுத்து தன்னுடைய குமாரனை நமக்கு ஒரு ஈவாக கொடுத்த கடவுளின் அன்பின் செய்தியைத் தான் நான் கேட்க விரும்புகிறேன். எங்க வீட்டு கிற்ஸ்மஸ் பட்ஜேட் உங்களுக்கு விளங்காட்டி பரவாயில்லை. எங்களுக்கும் கடவுளுடைய இந்த அன்பின் செயல் முழுசா விளங்கவில்லை. ஆனா குறைவு பட்டாலும் கொடுக்கணும்னு ஓரு ஆசை இருக்குது. அப்படி குறைவு படுவதிலே ஒரு இனம்புரியாத நிறைவு இருக்குது! என்ன யோசிக்கிறீங்க? நான் சொல்லுவது கொஞ்சம் முட்டாள்தனமா தெரியுதா? நானும் அவரும் (என் வீட்டுக்காரரும்) “குறைவுபட கொடுப்பதிலேதான் மகிழ்சியும் நிறைவுமிருக்குது." என்று நல்லாவே புரிஞ்சுகிட்டோம். உங்களுக்கு எங்களது நிறைவான் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

Friday, December 9, 2011

CHRISTIAN IDIOT. - VII

I love my Swift. But I don’t like the escalating cost of petrol. I decided to use an alternate fuel. Auto gas came in handy! It is easily available, eco-friendly, economical and absolutely legal. So I fixed a gas unit and I am happy I did. I thought I was smart but I have a ‘smarter’ neighbor! He fills his auto gas tank with domestic LPG cylinder. There is a big racket going on in this little town. For a fee of 40 rupees a boy would slip into your house like a thief with a pump and secretly transfer the contents of your domestic LPG cylinder into your family car gas tank! (You may have to stand outside your house and make sure nobody takes note of this illegal activity!) It was one of those occasions the neighbor caught my eyes. He even dared to give me a cool advice! “With just the two of you in our house hold,” told my neighbor, “you can use your extra cylinder for your family car, sir. This is real economy and gives better mileage too, sir.” I walked away saying, “It may be good for you; but you know it is illegal.” My wife was waiting with a smirk on her face. “You gave him good.” She said, “Had you agreed with him, I would have called you a simple idiot and not a Christian Idiot!” Just look at me! I seem to end up being an idiot either way!

நான் ஒரு முட்டாளுங்க!- 7

என்னுடைய ஸ்விவ்ஃட்டு காருமேல எனக்கு கொள்ள பிரியம். விஷம் மாதிரி பெற்றோல் விலை ஏறுதே.. அதுதான் பிடிக்கலேங்க. காருக்கு காஸ் டாங்க் போட்டுட்டேன். காஸ் நல்லது தானே! சுலபமா கிடைக்கிது, சுத்தமானது, மாசு கிடையாது, சிக்கனமானது, சட்டத்துற்கு உட்பட்டது ஆகவே புத்திசாலித்தனமா செஞ்சுட்டேன். என்னைவிட “புத்திசாலி” என்னுடைய நண்பர். அடுப்பெரிக்கன்னு அளந்து அளந்து அரசாங்கம் கொடுக்கிற சிலின்டர் காஸ்ஸை காருலே போட்டுக்கிறாரு! 40 ரூபா கொடுத்தா வீடு தேடிவந்து திருட்டுத்தனமா உங்க வீட்டு காஸ்ஸை உங்க கார்லே ஏத்திவிட எங்க ஊரிலே ஒரு கூட்டமே இருக்குதாம். (இந்த திருட்டு வேலை யார் கண்ணிலேயும் படாம இருக்க வீட்டு வாசல்லே காவல் காக்க வேண்டியது வீட்டுக்காரர் பொருப்பு.) இப்படி காவல் காக்கிற நண்பர் ஒரு நாள் என் கண்ணிலே பட்டுட்டார். அசடு வழிய எனக்கு ஆலோசனையும் சொன்னார், “ஹி...ஹி... உங்க வீட்டிலே இரண்டு பேருக்குதானே சமையல்! மிஞ்சிர சிலிண்டரை கார்லே போட்டு ஓட்டுங்க, சார். இது ரொம்ப சிக்கணம். மைலேஜும் நல்லா கிடைக்கும்.”ன்னார். “சிக்கணமா இருக்கலாம்ங்க; ஆனா சட்டவிரோதம்னு உங்ககுக்கே தெரியுமில்லே.”னு சொல்லிகிட்டே வீட்டுக்குள்ளே வந்தேன். என் மனைவி “அந்த ஆளுக்கு நல்லாவே குடுத்தீங்க. திருட்டு முட்டாளா இல்லாமே நஷ்டப்படுர முட்டாள இருந்திட்டு போரது உங்களுக்கு எவ்வளவோ மேல்” ன்னு என்ன பாராட்டினாங்க. பாராட்டுங்களா இது?! எப்படி பார்த்தாலும் எனக்கு முட்டாள் பட்டந்தான் போங்க.

Sunday, November 27, 2011

நான் ஒரு முட்டாளுங்க!- 6

“ஆவிக்குரிய” கூட்டங்களுக்குப் போகும் எனது நல்ல கிறிஸ்தவ நண்பர்கள் என்னையும் அந்தக் கூட்டங்களுக்கு கூப்பிடுவாங்க. நானும் ஒன்னுரெண்டு கூட்டங்களுக்கு போயிருக்கேன். பாட்டும் மியூசிக்கும் நம்ம ஞானப்பாட்டைவிட ரொம்ப நல்லாவே இருக்கும். ஆனா போதனையோ அப்படி இப்படி சுத்தி “முழுகு ஞானஸ்நானம் எடுத்தால் தான் மோட்சம் கிடைக்கும்” னு வந்து முடிப்பாங்க. அது மட்டுமில்லை, “யோர்தானிலே யோவான் ஸ்நானகன் முழுக்கு ஞானஸ்நானம் குடுத்ததார்”னு தானே வேதம் சொல்லுது" னு திருமறை ஆதாரம் வேரே காட்டுவாங்க. எனக்கு சில கேள்விகளுக்கு விடை தெரியனுங்க: யாருங்க இந்த யோவான் ஸ்நானகன்? அவரு ஒரு யூதருங்க! ஞானஸ்நானம் வாங்க அவரு கிட்ட திரண்டு வந்த மக்கள் கூட்டம் யாருங்க? அவுங்க எல்லாருமே யூதர்கள்தாங்க. ஞானஸ்நானம் வாங்கின பிறகும் அவுங்க யூதர்களாகவே தான் இருந்தாங்க. யோவான் ஸ்நானகன் குடுத்த முழுகு ஞானஸ்நானம் அவர்களை ரட்சிக்கவுமில்லை; கிறிஸ்தவுங்களாக்கவுமில்லை. “இயேசுவானவரும் அவரிடத்திலே முழுக்கு ஞானஸ்நானம் வாங்கினாரே”னு சொல்லுவாங்க. இயேசு யாருங்க? எட்டாம் நாளிலெ விருத்தசேதனம் பெற்று, ஒவ்வொரு சனிக்கிழமையும் (ஏழாம் நாளும்) ஒழுங்கா ஜெபாலயம் போன பாரம்பரிய யூதர் தானே! அவர் கைக்கொண்ட யூதப் பாரம்பரியத்தைப்பற்றி கிறிஸ்தவர்களான நமக்கென்னாங்க? கிறிஸ்தவ ஞானஸ்நானம் பற்றி என்னைக் கேட்டிங்கனா, “வேதம் சொல்லுவது தாங்க சரி” ன்னு சொல்லுவேன். “ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்....உண்டு.” (எபேசியர் 4:5) எனக்கு இரண்டாவது ஞானஸ்நானம் வேண்டவே வேண்டாங்க. ஏன்னா அது முதல் ஞானஸ்நானத்திலே எனக்கு கிடைச்ச கடவுளுடைய கிருபையை குப்பையிலே போடுரா மாதிரி இருக்குமுங்க. “முழுக்கு ஞான்ஸ்நானம் வாங்காதவுங்களுக்கு பரலோகத்திலே இடமில்லை!”ன்னு அதே நல்ல கிறிஸ்தவ நண்பர்கள் சொன்னாங்க. அப்படி ஒரு பரலோக இராஜ்யத்துக்கு போக நான் ஆசைப்படலேங்க. அதைவிட “உம்முடைய இராஜ்யம் வருவதாக உம்முடைய சித்தம்...... பூமியிலும் செய்யப்படுவதாக.....” என்ற ஜெபத்தை நிஜப்படுத்த உழைப்பதே எனக்கு போதுமுங்க. ஏங்க, நான் சொல்ரது கொஞ்சம் முட்டள்த் தனமாக தெரியுதா? கவலையில்லைங்க.. மத்தேயு 28:20 லெ “உங்களொடிருக்கிறேன்”னு வாக்களித்தவுரும் அதை நம்பி பரலோகம் போகனும்னு ஆசைப் படாம, கடவுளுடைய இராஜ்ய வருகைக்காக உழைக்கிற எல்லருமே என்னோட சேர்ந்த (முட்ட்டாள்) கூட்டந்தாங்க.

CHRISTIAN IDIOT. - VI

Some of my good Christian friends who go to religious meetings persuade me to attend those meetings. Well, I have been to some of them. The songs and music seem to be livelier than our church hymnal. But the message always boils down to “qualifying for salvation through immersion baptism.” Their favorite biblical evidence for immersion baptism is the baptism given by John the Baptist on the banks of river Jordan. I try to find answers to some idiotic questions: Who was this John the Baptist? He was a Jew! Who were the multitudes that came to be baptized by him? They were also Jews! What did they become after they were baptized? They just remained Jews! John’s baptism did neither save them nor did it make them Christians! It is no big deal that Jesus also received that baptism along with other Jews. For him it was just another Jewish rite. After all Jesus received circumcision as a Jewish child. And he worshiped in synagogues on Saturdays as a Jew. Why do we have to care about those Jewish rites? When it comes to Christian baptism, I would rather confess my faith with St. Paul, “One Lord, one faith, one baptism.” (Eph.4:5) I would boldly refuse a second baptism because it disregards God’s grace given to me in my first baptism. My intelligent Christian friends tell me that I will not enter into the pearly gates without an immersion baptism. I do not care for such a heaven! I would rather spend my life to give credence to the words of the prayer my Lord taught me, “Thy kingdom come, Thy will be done on this earth…” I may sound idiotic. But I am not alone! There are other idiots including the good Lord who said, “Lo, I am with you always!” and all those who toil for the coming of God’s Kingdom instead of qualifying to go to “heavenly” Kingdom.

நான் ஒரு முட்டாளுங்க!-5

குடும்பமா நாங்க வெளியே போரதுன்னா ஒரே அவசரடிதான், போங்க. காலைவேளையிலே கேக்கவே வேண்டாம். பையனுங்க பள்ளிக்கூடத்திற்கு பிந்திடக்கூடாதுன்னு என்னை ஒரு வழி பண்ணிடுவானுங்க. இவரு மட்டும் என்ன! மதிய டிபன் நேரத்திலேயே ரெடியா இல்லேன்னா காது கிழியர மாதிரி கத்துவாரு. ஆனா பாருங்க ஞாயிற்றுக் கிழமை அன்னைக்கு இந்த அவசரம் எல்லாம் போன இடம் தெரியாது. ரொம்ப சவகாசமாத் தான் காரியம் நடக்கும். பசங்க பள்ளிக்கூடம் மாதிரி ரெண்டாவது மணியடிச்சா கோயில் கதவ மூடுரதுக்கு வாச்மேனுமில்லை. அவரு ஒர்க் ஷாப் மாதிரி வந்த நேரத்தை பன்ச் அடிக்கிற கடிகாரமுமில்லே. “கோயிலுக்குதானே, மெதுவா போனா போதும்” னு ஒரு மெத்தனம்! வாரா வாரம் கோயிலுக்கு பிந்தி போரது எனக்கு ரொம்ப சங்கடமா இருக்குதுங்க. ஆராதனைஆரம்பிக்கிறதுக்கு முன்னாலேயே போய் அமைதியா ஜெபம் பண்ணுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆரம்ப துதி பாடலையும், பாவ அறிக்கையையும், ஐயர் அறிவிக்கும் பாவ மன்னிப்பையும் தவர விட்டுட்டா குளிக்காம கோயிலுக்கு போனாமாதிரி இருக்குதுங்க. ஆண்டவர் நம்ம பாவத்தை மன்னிச்சாதானே நாம் அவரை ஆராதிக்க முடியும்! இதெல்லாம் என் குடும்பத்துக்கு எங்கே விளங்குது! எனக்குத்தான் முட்டாள் பட்டம்.

CHRISTIAN IDIOT. - V

It is always a mad rush when we get ready to go anywhere. On week-day mornings my sons drive me mad because they have to be on time in their school. My husband sometimes is equally inconsiderate. He shouts at me if the lunch pack is not ready on time. But they relax on their punctuality in going to church on Sunday mornings. My family thinks it is okay since there is no watchman to close the church gate at the stroke of the second bell. Nor do we have to clock-in our card at the church as they do in my husband’s workshop. It hurts me to note that we arrive late at the church every Sunday. I want to be at the church before the the worship starts because I cherish the silence before the service as a time for personal prayer. I wouldn’t like to miss the first hymn of praise, confession and the minister’s announcement of God’s forgiveness which are integral part of worship. Without God’s cleansing us, we cannot worship Him. I wish my family understands my anguish. Please tell me if I am being a little idiotic while others are cool about being late.

நான் ஒரு முட்டாளுங்க!-4

நான் ஒரு டீச்சருங்க. என் மகனுக்குக் கலியாணம். செலவுக்கு உதவியாயிருக்குமேன்னு PF லே part final விண்ணப்பம் கொடுத்திருந்தேன். இரண்டு ஓலை கூறியாச்சே இன்னமும் பணம் வந்தபாடில்லையேன்னு கவலையா இருந்தேன். “பணமெல்லாம் sanction ஆயி வந்திருச்சும்மா, ஆபீஸ்லே “கொஞ்சம்” எதிர் பார்க்கிராங்க; முட்டாளா இல்லாமே கொடுக்கிறதை கொடுத்திட்டு உங்க பணத்தை உடனடியா வாங்கிக்கிங்கோ” ன்னு எங்க HM சொன்னாரு. அவரும் கிறிஸ்தவர் தான். ந்ல்ல மனுஷர், பாவம்; ஆனா உலகம் தெரிந்தவர். “பணம் வர்ரப்ப வரட்டும், சார், எல்லாம் கடவுளுக்குத் தெரியும்” ன்னு அவருகிட்டே சவடாலா சொல்லிட்டு வந்துட்டேன். லஞ்சம் கொடுக்க எனக்கு மனசு வரலேங்க. HM சார் சொன்னா மாதிரி, நான் ஒரு முட்டாள்தாங்க! மூணாவது ஓலையும் கூறியாச்சு; பணம் இன்னும் வரலீங்க. **** **** **** **** **** சொன்னா நம்ப மாட்டீங்க மகன் கலியாணத்திற்கு நாலு நாளைக்கு முன்னாலே பணம் வீடு தேடி வந்திடுச்சு! ஆபீசுலே தணிக்கைக் கெடுபிடியாம். சும்மா சொல்லக்கூடாதுங்க, முட்டாளுங்க மேலேயும் சாமி கருணை வேச்சிகிட்டுத்தாங்க இருக்காரு!!

CHRISTIAN IDIOT. - IV

I am a teacher. My son is getting married. I had applied for part final of my provident fund. I was a bit worried as time was running out and two banns have already been called. My headmaster is a good Christian and a wise gentleman. He said, “Your PF part final has been sanctioned already. The money is ready for disbursement. But they are expecting “something”. Don’t be a fool, you better give them “something” and get your money without delay.” I simply told him, “Let it take its time, sir. God knows my need.” I was not willing to bribe in order to get my way through. But when the third of the banns was also called and there was no sign of the money, I began to wonder if I had acted idiotically but did not mind being an idiot. **** **** **** **** **** Can you believe this! Just four days before the wedding, the money was delivered in my house! The head clerk had to disburse it on account of a departmental audit. After all God takes care of idiots too

Saturday, November 26, 2011

CHRISTIAN IDIOT - 3

The worship just ended. My wife, kids and I greeted the pastor and told him we were new comers. He was kind; but walked away with a hurried, “New comer? Very good; come again!” He must be a busy man on a Sunday morning! We stood there watching well-dressed people laughing and talking in small groups after the worship. Nobody cared to speak to us. This is the fourth church we came to worship seeking “fellowship”. The story was the same everywhere. Nobody noticed us as though we were invisible! Perhaps I am an idiot to expect people to break away from their favorite circle of friends to care for strangers like us. But I am certainly a disappointed Christian idiot in search of Christian fellowship. Our search continues. You may find idiots like us in your church. Please talk to them they will be very happy.

நான் ஒரு முட்டாளுங்க!-3

நாங்க இந்தப் பட்டிணத்துக்கு புதுசுங்க. “ந்ல்ல CSI கோயில்லே சேந்துக்கோ,”ன்னு எங்க ஊரு உபதேசியாரு சொல்லி அனுப்பினாருங்க. குடும்பத்த கூட்டிகிட்டு மூணு வாரமா வெவ்வேறு CSI கோயிலுக்கா போனேங்க இது நாலாவது வாரம்; நாலாவது கோயிலுங்க. எங்கள “வா”ன்னு கூட யாரும் கூப்பிடலேங்க. சபையாருங்க அவுங்களுக்குளே நல்லாத்தான் பேசிக்கிராங்க ஆனா எங்களப் பாத்து சிரிக்கக்கூட மாட்டேங்கிராங்க.. நல்லா பாட்டெல்லாம் பாடுறாங்க எங்கிட்டே பாட்டு புத்தகமில்லே; என் பக்கத்திலிந்தவர் புத்தகம் காட்டியிருந்தா நானும் பாடியிருப்பேங்க. ஐயர் பிரசங்கம் ரொம்ப நல்லா இருந்துச்சு; ஆனா பாதிதான் விளங்கிச்சு; மீதி இங்கிலீசுங்க. கோயில் முடிஞ்சபிறகு ஐயர பாத்து தோத்திரம் பண்ணி ஊருக்கு புதுசுங்கன்னு சொன்னேங்க. “அப்படியா தம்பி, சந்தோஷம்!” னு சொல்லிட்டு போயிட்டாரு. அவருக்கு என்ன அவசரமோ, பாவம்! நாங்க குடும்பமா அங்கேயே நின்னுகிட்டிருந்தோங்க. மக்களேல்லாம் கூடிக் கூடி நின்னு பேசினவுங்க கொஞ்சம் கொஞ்சமா கலைஞ்சு போயிட்டாங்க. எங்கள யாருமே கண்டுக்கலேங்க. நான் ஒரு முட்டாளுங்க! எனனதான் கிறிஸ்தவங்களானாலும் பொழைக்க பட்டிணம் வந்தவுங்ககிட்டே குசலம் பேசுவாங்கனு நாம எதிர்பார்க்கலாமுங்களா? ஹும்… அடுத்த வாரம் வேறே கோயிலுக்கு போயி பர்க்க வேணடியதுதாங்க! எங்கள மாதிரி முட்டாளுங்க உங்க கோயிலுக்கும் வருவாங்க. தயவு பண்ணி அவுங்க கிட்டே கொஞ்சம் சிரிச்சு பேசுங்க; அவுங்க ரொம்ப சந்தோஷப் படுவாங்க.

நான் ஒரு முட்டாளுங்க - 2

கோவிலுக்கு முந்தியே வந்து நல்ல இடமா பாத்துதான் உக்காந்தேங்க. பிந்தி வந்தவுங்களுக்கு இடம் கொடுக்கலாம்னு கொஞ்சம் கொஞ்சமா நகுந்து இப்போ ஒரு தூணுக்குப் பின்னாலே உக்காந்திருக்கேங்க. இங்கேயிருந்து ஆல்டரும் தெரியலே ஐயரும் தெரியலே; இங்கே காத்துகூட இல்லே. பிந்திவந்தவுங்க வசதியா சாமி கும்பிடுராங்க. நாந்தான் மூலையிலே மாட்டிகிட்ட முட்டாளாயிட்டேன். பரவாயில்லேங்க; கோவிலுக்குள்ளேயே மத்தவுங்களுக்கு விட்டுக்கொடுக்காட்டி வேறே எங்கேங்க விட்டுகொடுக்கப் போறோம்,சொல்லுங்க.

CHRISTIAN IDIOT - 2

I came early to church as usual and took a good seat. I gave up my ‘good’ seat for a late comer and moved deeper and was happy about my “Christian sharing!” There were more late comers so I moved on farther until I ended up behind a pillar. I could see neither the pulpit nor the alter; and the fan was far away! Well, if I cannot give up my ‘good’ seat for another inside the church, what will I do outside? I felt idiotic cramped in that hidden corner. But I was a happy idiot!

நான் ஒரு முட்டாளுங்க - 1

எங்க வீட்டு குழாயிலே ரொம்ப கொஞ்சம்தான் குடிதண்ணி வருது. என்னடான்னா, பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் மோட்டார் போட்டு தண்ணிய உரிஞ்சிடுராங்களாம்! “சத்தமில்லாம நீங்ளும் ஒரு மோட்டார் போட்டுக்கொங்க, சார்” ன்னு அண்டை வீட்டுக்காரர் ஆலோசனை சொன்னார். ஐயய்யோ! அது சமூகவிரோதமான செயலாச்சேன்னு தோணுது. ஏதோ இருக்கிற தண்ணியிலே எட்டிக்கோ தொட்டிக்கோன்னு சமாளிக்கிறோம். அடுத்த வீட்டு அறிவாளிங்க அமோகமா தண்ணி புழங்குராங்க. நான் ஒரு முட்டாளுங்க! இப்படியே இருந்திட்டு போரேன் விடுங்க!

CHRISTIAN IDIOT - 1

We get very limited water from our tap. I hear our “smart” neighbors attach motors to their pipeline and “suck” water. One of them said, “Why don’t you also quietly attach a motor? After all we all do it!” My God! That is an antisocial activity! Well, we try to manage with whatever little water we get. Water flows freely in our neighbors' homes.
I am afraid I am an idiot; and I am happy to be so!