Saturday, December 17, 2011

நான் ஒரு முட்டாளுங்க - 8

நான் ஒரு மிஷன் ஸ்கூல் டீச்சர். எங்க பள்ளியிலே நடைமுறை கிறிஸ்தவம் அரங்க்கேறுவதை நல்லாவே பார்க்கலாம். எங்கூட வேலை செய்கிற பல பெண்கள் இப்பவே பண்டிகைக்கு பட்டுப் புடைவை வாங்கிட்டாங்க. இப்பவெல்லாம் எங்க ஸ்டாப்ஃ ரூம்லே பண்டிகைகு துணிவாங்குவது பற்றிதான் பேச்சு. நான் வாயை திறக்க பயந்துகிட்டு பேசுவதே இல்லை. எங்க குடும்பத்தினக்கு இந்த வருஷம் விலையுயர்ந்த துணிமணி வாங்க போகிறதிலேனு சொன்னா என்னை ஒரு மாதிரியா பாப்பாங்க. வசதி குறைந்த இரண்டு குடும்பத்துக்கு இந்த கிறிஸ்மஸில் உதவி செய்யனும்னு நாங்க குடும்பமா தீர்மானம் பண்ணியிருக்கோம். அந்த அளவுக்கு செலவு செய்ய எங்ககிட்டே தாராளமா பணமில்லை. ஆனா கிறிஸ்மஸ் காலதிதிலே எங்ககிட்டே இருக்கிறதை பகிர்ந்து கொடுக்கனும்னு ஆசை மட்டும் நிறையாவே இருக்கு. எங்க செலவை குறைச்சுக்கிட்டாதான் இதை நாங்க செய்யமுடியும். இந்த குடும்ப தீர்மானத்தை நான் எங்க டீச்சர்ஸ் கிட்டே சொல்ல முடியுமா, சொல்லுங்க! நல்லா ட்ரெஸ் பண்ணி, சந்தோஷமா கிறிஸ்மஸ் கொண்டாடுவதிலே தப்பே இல்லைங்கிரா மாதிரி ஏதாவது சொல்லி என் மனசை குழப்பிருவாங்க. நான் கேட்க விரும்புவது அது இல்லை. தன்னையே ஒறுத்து தன்னுடைய குமாரனை நமக்கு ஒரு ஈவாக கொடுத்த கடவுளின் அன்பின் செய்தியைத் தான் நான் கேட்க விரும்புகிறேன். எங்க வீட்டு கிற்ஸ்மஸ் பட்ஜேட் உங்களுக்கு விளங்காட்டி பரவாயில்லை. எங்களுக்கும் கடவுளுடைய இந்த அன்பின் செயல் முழுசா விளங்கவில்லை. ஆனா குறைவு பட்டாலும் கொடுக்கணும்னு ஓரு ஆசை இருக்குது. அப்படி குறைவு படுவதிலே ஒரு இனம்புரியாத நிறைவு இருக்குது! என்ன யோசிக்கிறீங்க? நான் சொல்லுவது கொஞ்சம் முட்டாள்தனமா தெரியுதா? நானும் அவரும் (என் வீட்டுக்காரரும்) “குறைவுபட கொடுப்பதிலேதான் மகிழ்சியும் நிறைவுமிருக்குது." என்று நல்லாவே புரிஞ்சுகிட்டோம். உங்களுக்கு எங்களது நிறைவான் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment