நான் ஒரு முட்டாளுங்க - 11
நான் கலியாணத்திற்குக் காத்திருக்கிறேன்; ரொம்ப நாளா காத்திருக்கிறேன். எனக்கும்
என் கலியாணத்திற்கும் குறுகே இருப்பது இரண்டு கேள்விகள்தான்! “என்ன போடுவாங்க?
எவ்வளவு குடுப்பாங்க?” டௌரி கேக்கிறதும் கொடுக்கிறதும் தவறு மட்டுமில்லை சட்டப்படி
(வரதட்சணைத் தடுப்புச் சட்டம், 1961, இந்திய தண்டனைச் சட்டத்தின் 406, 304பி, 498A பிரிவுகளின்படி) குற்றமும் கூட. திருச்சபையிலே இந்தப்பழக்கத்தை
பெண்களுக்கு விரோதமான பாவமாக ஏன் நாம் கருதுவதில்லை?
நான் ஐஸ்வர்யாராயா இல்லாம இருக்கலாம் ஆனா அழகா இல்லைனு சொல்ல முடியாது. கை
நிறைய சம்பளம் வாங்கும் படிப்பும் திறமையும் எனக்கு இருக்குது. ஒரு நால்ல
வேலையிலும் இருக்கிறேன். நான் ஏன் ஒருத்தருக்கு காசு கொடுத்து கழுத்தை நீட்டனும்?
நீட்டின கழுத்திலே தாலியைக் கட்ட காசு கேட்கிரவன் நாளைக்கு காசுக்காக க்ழுத்தை
நெறிக்கமாட்டான் என்பது என்னங்க நிச்சயம்? நான் என் அப்பாகிட்டே “டௌரி கேட்கிற
மாப்பிள்ளை எனக்கு வேண்டாம்”னு திட்டவட்டமா சொல்லிட்டேன்.
தன்மானமுள்ள எந்த ஆம்பிளையும் ஐஞ்சு லச்சத்திற்கும் ஐம்பது பவுனுக்கும் தன்னை
வியாபாரப் போருளாக்குவானா? இந்த மாதிரி
ஆளை என்னால் எப்படி புருஷனா மதிக்க முடியும்னு கேட்டால் என் அம்மா “போடி முட்டாள்
ஜென்மம்” என்று திட்டுறாங்க. நான் ஒரு முட்டாள்தாங்க. நான் மதிக்கக்கூடிய மனுஷன்
வருகிறவரைக்கும் நான் கலியாணத்துக்காகக் காத்திருப்பேங்க. எத்தனை நாள்
வேணும்னாலும் காத்திருப்பேங்க.
No comments:
Post a Comment