நான் ஒரு முட்டாளுங்க - 12 ஆசீர்வாதத் தட்டு
நாங்க ‘டெல்க்”! புரியலையா? TELC லுதரன் சபைக்காரங்க. CSI சபையிலே கட்டிகொடுத்த என் அக்கா வீட்டுக்கு
தோத்திரப் பண்டிகைனு வந்தேன். அக்காவுக்கு அவ புருஷன் மேலே ஒரே கோபம். “ஒரு ஆசீர்வாதத்
தட்டை வாங்க முடியாதத் துப்புக் கெட்ட மனுஷன்” என்று அத்தானுக்குத் திட்டு. “அந்தத் தட்டிலே
இருந்த தங்க சிலுவையை நம்ப குழந்தைக்கு போட்டிருந்தா தங்கத்துக்குத் தங்கமுமாச்சு;
தாயத்து போட்டாமாதிரி ஆண்டவனின் ஆசீர்வாதமுமாச்சு”னு அக்கா ஆதங்கப்பட்டா. வசதியான மக்களோடே போட்டி போட்டு ஏலம் கேட்டு தோத்து போன சோகம் அவருக்கு. ஓத்த
சம்பளக்காரன் எல்லாம் ஆசீர்வாத்த் தட்டுக்கு
ஆசைபடலாமானு கொம்புத் தேனுக்கு ஏங்கின முடவனா குருகிப்போனார் அத்தான்.
ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே மாட்டின்
லூத்தர் ரோமன்
கத்த்தோலிக்கத் திருச் சபை (indulgences) என்ற பாவமன்னிப்பு சீட்டு விற்று சிலுவைப்போருக்கும்
பேராலயங்கள் கட்டுவதற்கும் பணம் சேர்ப்பது தப்புனு புரட்சி பண்ணினாரே இரட்சிப்பை
விற்கவும் வாங்கவும் முடியாதுன்னு எதிர்த்தாரு.
இன்றைக்கு ஆண்டவனுடைய ஆசீர்வாத்த்தையே
கிறிஸ்தவங்க ஆசீர்வாத்த் தட்டுலே வச்சு ஏலம் போடுராங்களே, இது சரிங்களா? சொன்னா
நம்ப மாட்டீங்க - லூத்தரை மறந்த லுத்தரன் சபையிலும் ஆசீவாதத் தட்டு விலையாகுதுங்க.
முட்டாள்தனமா கேட்கிறேன்னு நினைக்காதீங்க, ஆயிரம் ஆயிரமா கொடுத்தவங்களுக்குத்தான்
தட்டிலே ஆசீர்வாதம்னா ரெண்டுகாசு கொடுத்த அந்த விதவைக்கும் எங்களைப் போன்ற ஏழை
பாழைங்களுக்கும் ஆண்டவர் என்னங்க கொடுப்பார்?
என் அக்கா வீட்டிலே இத்தனை கலவரத்தை எற்படுத்தின
அந்த ஆசீர்வாத்த்தட்டை 52 ஆயிரம் கொடுத்து வாங்கிட்டு போனவுங்க வீட்டிலே
ஆசீர்வாதம் நிறம்பி வழியும்னு எனக்கு தோணலைங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க?
No comments:
Post a Comment