நான் ஒரு முட்டாளுங்க - 10
எங்களூர் தோத்திரப்பண்டிகைக்குக் குலுக்கல்
சீட்டு நடத்துராங்களாம்! முதல் பரிசு தங்கக் காசாம்! பரிசுச் சீட்டு வாங்குவது
பற்றி திருச்சபைத் தலைவர் ஒருவர் என்னை அணுகினார். அது என்னை வெகுவாக பாதித்தது.
பரிசுச் சீட்டு, குலுக்கல் சீட்டு, RAFFLE TICKET
எல்லாம் ஒரேமாதிரி
தவறுதான் என்று சொல்லிப் பார்த்தேன். சீட்டு விற்ற பணத்தில் பரிசுப் பொருட்கள் வாங்கப்படாததால்
இது RAFFLE இல்லைங்க என்று வாதித்தார். பரிசுச் சீட்டு
வாங்க மறுத்துவிட்டேன். பத்து ரூபாய் கொடுத்து தங்கக் காசை தட்டிகிட்டு போகும்
வாய்பைத் தவறவிட்ட என்னை ஒரு மாதிரியா பார்த்துவிட்டு போனார். அவர் பார்வையில்
நான் முட்டாளாவே இருக்கலாம் ஆனால் என் முட்டாள் தனத்திற்கு சில காரணங்கள்
இருக்கு சொல்லுறேன் கேளுங்க.
1.
இறையியல் முறண்பாடு: (THEOLOGICAL OBJECTION) நாம் நம்புவது கிருபையின் கடவுளை. குலுக்கல்
சீட்டு வாங்குகிறவன் நம்புவது அதிஷ்ட தேவதையை! “கிரியையினாலல்ல கிருபையினால்”
என்பது கிறிஸ்தவம். “இரண்டுமல்ல அதிஷ்டத்தினால்” என்பது குலுக்கல்த்துவம்!
2.
ஒழுக்க
முறண்பாடு: (MORAL OBJECTION) உழைக்காமல் சிரு முதலீட்டினால் பெரு
லாபமடையத் தூண்டுவது முறையானதல்ல என்பதால் தமிழக அரசே குற்றமென்று கைவிட்ட
குலுக்கல் சீட்டை கிறிஸ்தவத் திருச்சபை நடத்தலாமா? (GAMBLING IS
AN UNIVERSAL HUMAN WEAKNESS WHICH HAS TO BE CONDEMED.) சூதாடுவது
தவிற்கப்பட வேண்டிய அகில உலக மனித பெலவீனம்.
3.
உளவியல்
முறண்பாடு: (PSYCHOLOGICAL OBJECTION) பத்து ரூபாய் கொடுத்து சீட்டு வாங்கும் ஒவ்வொருவருக்கும் பரிசு
வாங்குவதற்குறிய சம வாய்ப்பு (EQUAL
OPPORTUNITY) இருப்பதால், பரிசு கிடைக்கதவருக்கு பெருத்த ஏமாறம்
ஏற்படுவதுடன் பரிசு பெற்றவர்மேல் அவசியமற்ற பொறாமையும், குலுக்கல் நடத்திய
முறையின் மேல் தேவையற்ற சந்தேகமும் ஏற்படுவது இயல்பு.
4.
சமய
முறண்பாடு: (RELIGIOUS OBJECTION) நன்றிவழிபாட்டு விழாவில் காணிக்கை கொடுப்பதற்கு நன்றியறிதலே உந்தமாக (MOTIVATION)
இருக்க வேண்டுமேயன்றி “எப்படியாகிலும் தங்கக் காசு வென்றிட
வேண்டும்” என்பது ஈகையின் உந்தம் அல்ல. விதவை கொடுத்த இரண்டு காசு ஏசுவுக்கு
ஏற்புடையதாயிருந்தது நாமறிந்ததே!
விவரமான கிறிஸ்தவங்க தங்கள் பணத்தை கோவில் நடத்தும்
குலுக்கலிலே தைரியமாக முதலீடு செய்வாங்க. “பரிசு கிடைச்சா கிடைக்கட்டும்;
கிடைக்காட்டி நம்ம பணம் ஆட்டோமடிக்கா காணிக்கையா மாறிடுமில்லே”னு ஒரு நம்பிக்கை!!
நானொரு முட்டாளுங்க என் பணத்தை நேரடியா காணிக்கை பையிலே போட்டிருவேங்க. காணிக்கையிலேயே சூதாட்டமா! இது கடவுளுக்கே அல்வா கொடுக்கிற செயலுங்க!!
No comments:
Post a Comment