Monday, March 16, 2015

நான் ஒரு முட்டாளுங்க 18 - அதிகாலை சுவிசேஷக் கூச்சல்

எங்க மூத்த பொண்ணு எலிசபெத் 12ம் வகுப்பு தேர்வு எழுதுகிறாள். அரசு பள்ளியிலே தான் படிக்கிறாள். நல்லா படிப்பாள். டியூஷன் ஏற்பாடு செய்வதற்கெல்லாம் வசதியில்லை. ஆனா ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கிறாள். தம்பி தங்கை தொந்தரவு இல்லாம படிக்கனும்னு அதிகாலமே எழுந்து படிப்பா. “பக்கத்துத் தெரு பள்ளிவாசல் தொழுகை சத்தம் காதைக் கிழிக்குதும்மானு நொந்துக்குவா. “ கொஞ்சம் பொருத்துக்கம்மா, அவுங்க சாமியை அவுங்க கும்பிடுராங்க! நாம என்ன செய்யமுடியும்?” என்று சமாதானம் சொல்லிப் பார்த்தேன். “சாமி கும்பிடரவுங்க சத்தமில்லாமே கும்பிடலாமில்லெஎன்று முனகினாள்.
 பரிட்ஷை பக்கத்திலே வர வர தபசுகாலமும் ஆரம்பிச்சுடுச்சு. எங்க தெருவிலேயே இருக்கிற நம்ப ஆலயத்திலே காலை 5:30 லிருந்து அரை மணி நேரம் தபசுகால அதிகாலை ஒலிபெருக்கி ஆராதனை நடக்குதுங்க. படிக்க முடியலையேன்னு மகள் அழுகிறாள். “ஐயோ! நம்ம கோயில் சமாச்சாரமாச்சே; யாரு கிட்டேயும் மறுப்பு சொல்ல முடியாதேனு மனசு அடிச்சுக்குது! நற்செய்தி சொல்ல வேண்டியதுதான் அதிகாலை அமைதியைக் குலைத்து வலுக்கட்டாயமாசுவிசேஷக் கூச்சல்போடுவது எனக்கு சரியாப் படலை.

இஸ்லாமியர் தொழுகை சத்தம் என் மகளுக்கு பிடிக்காத மாதிரி நம்முடைய லெந்து கால பக்தி பரவசம் எத்தனை பேர் சாபத்தை சம்பாதிக்குதோ தெரியல்லையே. அவரு கிட்டே மெதுவா சொல்லிப் பார்த்தேன். அவருக்கு வந்துச்சே கோபம்: “நம்ப சேகரக்குழுவும், போதகர் ஐயாவும் சேர்ந்து செய்கிற காரியம் உனக்கு தப்பா தோணுதோ! முட்டாள், முட்டாள்!” என்று சீரினார். நீங்களே சொல்லுங்க, நான் ஒரு முட்டாளா

3 comments:

  1. http://samszammy.blogspot.in/2017/03/worship-ala-ram-mandir-issue.html

    Dear Bishop, Happened to read your blog. I'm Deena Sangeetha's brother. This is what I had wrote sometime ago. Similar thoughts. SO sharing with you

    ReplyDelete
    Replies
    1. hi i just wanted to encourage you to google and find out what these verses say if you never did before and to tell you that Jesus Christ loves you so much 💟

      john 3:16-21
      romans 5:6-11
      romans 10:9-13
      to go and check out this channel on youtube called “Living Waters” and if you’re a human being i’m sure you can relate to it somehow! and if you or anyone else who might see this is a catholic they talk to catholics too! so you should search that up and you should hear the message and listen to both sides because he talks with other people. God bless you in the name above all names, Jesus Christ the Son of the living God. “THE LORD OUR RIGHTEOUSNESS” jeremiah 23:6

      Delete
  2. hi i just wanted to encourage you to google and find out what these verses say if you never did before and to tell you that Jesus Christ loves you so much 💟