Saturday, August 9, 2014

நான் ஒரு முட்டாளுங்க - 14 "தெருக் குத்து"

ங்க வீடு முச்சந்தியிலே தெருவைப் பார்த்தாமாதிரி அமைஞ்சிருக்கு. இப்படி இருக்கிற மனைக்குதெருக் குத்துன்னு பேருங்களாம். இங்கே கட்டின வீட்டிலே தீய சக்திகளின்நடமாட்டம்அதிகமாக இருக்கும்னு சொல்லுராங்க. நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் பலர் இதைப்பற்றி எங்களை எச்சரித்தாங்க. ஒரு கிறிஸ்தவர் கனிவுடன் ஒரு ஆலோசனையும் சொன்னாருங்க: “உங்க வீட்டு கேட்டிலயாவது காம்போண்டு சுவத்திலாவது பளிச்சினு ஒரு சிலுவை வையுங்க; கர்த்தருடைய பாதுகாப்பு உங்க வீட்டிலே விலகாம இருக்கும்.” 
ஒரு இந்து நண்பர் சற்று வெளிப்படையாகவே எச்சரிப்பு விடுத்தார்: “நாங்க காபந்துக்காக பிள்ளையாரு (வினாயகர்) சிலை அல்லது வேல் கம்பு வைப்போம். நீங்க கிறிஸ்தவங்க அதெல்லாம் செய்ய மாட்டீங்; தெருவைப் பார்த்தாமாதிரி உங்க சிலுவையை வையுங்க, சார். காத்து கருப்பு ஒண்ணும் அண்டாது. இதெல்லாம் வாஸ்து சாஸ்திரப்படி அவசியம்ங்க; எல்லாரும் செய்யரதுதான், கூச்சப்படாம செய்யுங்க, சார்.” என்று சொன்னார்.
அதற்கு பிறகு கொஞ்சம் கவனித்து பார்க்க ஆரம்பித்தேன். “தெருக்குத்திலேகுடியிருக்கிற எல்லா அறிவாளிகளுமே வேலுக்கும் சிலுவைக்கும் பின்னாலே ஒளிஞ்சிகிட்டுதான் வாழ்கின்றாங்க. ஒருதெருக் குத்துகிறிஸ்தவ நண்பரிடம் அவர் வீட்டு சிலுவைபற்றி லேசா பேச்சு கொடுத்தேன். அதிர்ந்து போன அவர் ஒரு செகண்டிலே சுதாரிச்சுகிட்டு, “ஹி… ஹி… இங்கே கிறிஸ்தவங்க குடியிருக்கிறாங்கனு சும்மா ஒரு சாட்சிக்கு தாங்க வைச்சிருக்கோம்.” என்றார்.

அந்த காலத்திலே கிறிஸ்தவங்க தெரு முக்கிலே நின்று சுவிசெஷ பிரசங்கம் பண்ணுவாங்க. இப்போ நம்ம வைச்ச சிலுவைதான் சாட்சி சொல்லுதுங்க! எதுக்கு சாட்சி சொல்லுது- கிறிஸ்துவாலே கண்ட மீட்புக்கா அல்லது வாஸ்துவாலே கொண்ட அச்சத்திற்கா,? “அஞ்சுவது அஞ்சாமை மடமைனுவாங்க. எனக்கு அச்சமுமில்லே அறிவுமில்லே; நானொரு முட்டாளுங்க ஆனா கிறிஸ்தவ முட்டாளுங்க.

No comments:

Post a Comment