Friday, July 25, 2014

நான் ஒரு முட்டாளுங்க - 13 "வாக்குத்தத்த அட்டை"



 நான் ஒரு முட்டாளுங்க - 13  "வாக்குத்தத்த அட்டை"

நான் ஒரு கிறிஸ்தவ புத்தகக் கடையில் ஒரு கிறிஸ்தவரல்லாத வாலிபரைப் பார்த்தேன். இந்தக் கடையில் இவருக்கு என்ன ஆர்வம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். பக்தியுள்ள கிறிஸ்தவர்களின் வீட்டு சுவர்களை அலங்கரிக்கவென்றே எழுதப்பட்டதுண்டு வசனஅட்டை ஒன்றை அவர் தெரிந்தெடுத்து, மெதுவாக கடைக்காரரிடம் வந்து, “அண்ணே, பொடி எழுதிலேஎபி.13:5” ன்னு எழுதியிருக்கே அது இல்லாம இந்த அட்டை கிடைக்குமா?” என்று ஒரு கேள்வி கேட்டார். “எதுக்கு அது இல்லாம வேனும்?” என்று கடைக்காரன் கடுகடுக்க, அந்த பையன் கொஞ்சம் வெக்கத்தோடே, “என் ஃப்ரெண்டுக்கு கொடுக்கனும்; நானே சொல்ராமாதிரி இருந்தா நல்லா இருக்கும்என்றான்! “டேய் தம்பி, இது நீ உன் காதலிக்கு சொல்ர வார்த்தை இல்லேப்பா! கர்த்தர்நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லைஎன்று நம்ம எல்லாருக்கும் சொல்லுர வசனமப்பா  என்று கடைக்காரர் ஒரு போடு போட்டார்.
விவலியம் அறியாத வாலிபன் வசனத்தை விளங்கிக்கொள்ளாதது பரவாயில்லைங்க.  விசுவாசக்கூட்டத்தார் வாக்குத்தத்த வசனம்என்ற பெயரில் வேத வசனத்தைத் துண்டு போட்டுவாக்குத்தத்த அட்டைகளை  அச்சடித்து; அதற்கு பொருள் கொடுக்கிற மீதிவசனத்தை மறந்துட்டா எப்படிங்க?
எபிரேயர் 13:5 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே
  முழு வசனத்தையும் படிச்சு பாருங்க: பண ஆசை இல்லாமல், “இருக்கிறது போதும்என்பவர்களுக்குதான் இந்த வாக்குத்தத்தம்!  எல்லாருக்குமில்லை! பண ஆசைக்காரனுக்கும், பேராசைக்காரனுக்கும் கை கொடுக்கவுமாட்டார்; விலகுவதில்லைன்னு வாக்கு கொடுக்கவுமாட்டார்.
வேதவசனத்தைத் துண்டுபோட்டுஇது கடவுள் எனக்குக் கொடுத்த வாக்குத்தத்தம்என்று சொல்லும் விசுவாசிகளிடம் சொன்னாஅட போய்யா, நீ வெதத்தை பகுத்தறியத் தெரியாத முட்டாளு.” அப்படீங்கராங்க! முட்டாளா இருந்தாலும் கிறிஸ்தவனா இருப்பது முக்கியமில்லையா?

No comments:

Post a Comment