Here are some challenging Indian situations of ordinary people who willingly chose to be considered fools. Very often they end up being losers. They were inspired by the foolishness of the cross as found in I Corinthians 1:18-31. No wonder smart people think these Christians are idiots. But then, they are "Christian Idiots". If you are one of them, don’t lose heart... There has always been Christian Idiots and one of them died on the cross.
Tuesday, March 20, 2012
நான் ஒரு முட்டாளுங்க—9
எங்க வீட்டிலே லெந்து காலத்திலே பூ வைக்க மாட்டாங்க பட்டு கட்ட மாட்டாங்க கறி சாப்பிட மாட்டாங்க சினிமாவுக்கு போகமாட்டாங்க. (டீ.வீ சீரியல் மட்டும் விதிவிலக்குங்க – அது போனால் வராது பாருங்க!). ரொம்ப பக்தியா வெள்ளிக்கிழமை ஆராதனைக்கு கூட போவாங்க. நாங்க பாரம்பரிய கிறிஸ்தவுங்க பாருங்க ஆகையினாலே லெந்துகாலம் ரொம்ப கெடுபிடிதான் போங்களேன்!
ஈஸ்டர் அன்னைக்கு பார்க்கனுங்களே! ஏசு ஸ்வாமி உயிர்த்தேழுந்த சந்தோஷத்தை விட தபசு காலம் முடிந்த சந்தோஷம் தானுங்க பெருசா இருக்கும்! தலைக்கு இரண்டு முழம் பூ என்ன! பட்டு புடவை என்ன! கோழி வருவல் என்ன! மட்டன் பிரியாணி என்ன! போதாதற்கு லெந்து நாளிலே ரிலீசான புது படத்தினுடைய திருட்டு சீடீ என்ன! ஈஸ்டர் ஓரே கோலாகலம் தானுங்க! அதுக்கு பிறகு ஆன்மீகம் “பழய குருடி கதவைத் திறடி” கதைதான். இது சரியா தோணலையேன்னு சொன்னால் எனக்கு முட்டாள் பட்டம் கட்டுராங்க.
நான் தெரியாமதான் கேட்கிறேன்: இருமுடியை இறக்கி வைத்த ஐயப்பன் பக்தனுக்கும்’ இஃப்தார் கஞ்சி குடிச்சு விரதம் முறித்த முகமதிய நண்பனுக்கும் ஈஸ்டரோடே தபசுகாலத்தை முடிச்சிக்கிற நமக்கும் என்னங்க வித்தியாசம்? எனக்கென்னமோ பணியில் இருக்கிறவர்களுக்கு (refresher course) பணியிடைப் பயிற்சி இருப்பது போல லெந்து காலம் நமக்கு ஒரு (spiritual refresher course) ஆன்மீக வாழ்விடைப் பயிற்சி என்று தோணுது. ஈஸ்டர் வரைகும் எதையாவது த்ற்காலிகமா கைவிடுவது என்பது முக்கியமல்ல; ஈஸ்டருக்கும் பிறகு என்னத்தை கைக்கொள்ள பழகிக்கிறோம் என்பது தான் முக்கியம்.
சுருதி கூட்டின இசைக்கருவிகளை வைத்து கச்சேரி பண்ணாட்டி எப்படிங்க! லெந்துகாலம் நமக்கு ஆன்மீக சுருதி கூட்டும் காலங்க. ஈஸ்டருக்கு பிறகு நடக்கும் நமது ஆன்மீக வாழ்க்கைதான் நமது கிறிஸ்தவ கச்சேரிங்க. “பாடுங்க! பாடுங்க!! பாடிகிட்டே இருங்க!!!”
Subscribe to:
Post Comments (Atom)
அய்யா மிகவும் அருமை கொஞ்சம் சிரிக்கவும் நிறைய சிந்திக்கவும் வைத்தது பதிவுக்கு நன்றி...
ReplyDeleteஇப்படிக்கு
பிரின்ஸ் தேவாரம்
https://www.facebook.com/pages/The-Word-Of-God/179355938813760